Type Here to Get Search Results !

பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பேவுஅள்ளி வருவாய்  கிராமத்திற்க்குட்பட்ட  பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்களுடைய பட்டாவில்  பெயர் திருத்தம், உறவு முறை திருத்தம், நிலபரப்பு திருத்தம் உள்ளிட்ட மாற்றங்களை மேற்கொள்ள  கரகூர்  வி.ஏ.ஓ அலுவலகத்தில்  சிறப்பு பட்டா பதிவு திருத்த முகாம் நடைப்பெற்றது.

இம்முகாமிற்க்கு பாலக்கோடு தாசில்தார் ராஜசேகரன்  தலைமை வகித்தார், இம்முகாமில்   துணை வட்டாட்சியர் சத்யபிரியா, வருவாய் ஆய்வாளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் மாதப்பன், மாதேஷ், கோடீஸ்வரன், சத்தியா, வசந்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் 25க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தகுதியான மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு உரிய உத்தரவுகள் வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies