Type Here to Get Search Results !

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல், தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

தருமபுரி மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் பேச்சுப்போட்டி அரசு கலைக்கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு 19.04.2022 அன்று முற்பகல் 10.00 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 02.00 மணிக்கும் தொடங்கி நடைபெறவுள்ளது.

கல்லூரி / பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000/- இரண்டாம் பரிசாக ரூ.3000/- மூன்றாம் பரிசாக ரூ.2000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும். மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாகத் தொகை ரூ.2000/- வீதம் வழங்கப்பெறவுள்ளது, ஆக மொத்தம் தொகை ரூ.24,000/த்திற்கு பரிசுகள் வழங்கப்பெறும்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தெரிவித்துள்ளார்.

ஓம் /- ச.திவ்யதர்சினி இஆபா

மாவட்ட ஆட்சித்தலைவர்,

தருமபுரி மாவட்டம்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தருமபுரி மாவட்டம்.


 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies