தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஆதார் மையம் செயல்பட்டு வரும் நிலையில், இந்த மையத்தில் தினசரி புதிய ஆதார் பதிவு செய்ய, முகவரி மாற்ற, தொலைபேசி எண் மாற்ற, உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக அரூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, முல்லைவனம் மொண்டுக்குழி,மாம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக டோக்கன் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு முப்பது நபர்களுக்கு மட்டுமே ஆதார் பணி மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது கொரோனா பரவல் குறைந்தும் கூட ஆதார் மையத்தில் டோக்கன் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அடிக்கடி ஆதார் மையத்தில் உள்ள பிரிண்டர் , உள்ளிட்ட சாதனங்கள் பழுதாகி விடுவதால் ஆதார் பணி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது
இதன் காரணமாக பள்ளி மாணவிகள் கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக கால் கடுக்க நின்றும் அதன் பணிகள் முடியால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் எனவே இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)

