தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயின்று வரும் மாணவியர்கள் மதுமிதா, நர்மதா, மௌனிகா, காவியா, கீர்த்தனா, கௌசல்யா ஆகியோர் ஊரக தோட்டக்கலை பணி அனுபவத்திற்காக இரண்டு மாதம் பயிற்சி பெற வந்துள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக ஊரகப் பங்கேற்பு மதிப்பீட்டை அழகம்பட்டியில் உள்ள விவசாயி பழனி தோட்டத்தில் நடத்தினர். அதில் காலவரைபடம், சமூக வரைபடம், வளங்கள் வரைபடம், தினசரி வழக்கம், வளங்கள் அட்டை, பருவகால நாட்காட்டி, அணி தரவரிசை, இயக்க வரைபடம், வென் வரைபடம், குறுக்கு நடை மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளை வரைபடம் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள், இதில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
.gif)

