Type Here to Get Search Results !

மாவட்ட அளவிலான வளைகோல்பந்து(ஹாக்கி) லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது.

மாதிரி புகைப்படம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கம், தருமபுரியில் 19.04.2022 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்கள் 8.00 மணிக்கு அறிக்கை செய்ய வேண்டும். 

மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இடங்களைப் பெறும் வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறும் வீரர்கள் மாநில அளவிலான வளைகோல்பந்து லீக் போட்டிகளுக்கு அனுமதிக்கப்படுவர்.

எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள வளைகோல்பந்து விளையாட்டு வீரர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தங்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி., இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies