அரூர் வருணதீர்த்தம் தனியார் கூட்ட அரங்கத்தில் நகர வணிகர் சங்கத்தினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தர்மபுரி மாவட்டம், அரூர் நகர வணிகர் சங்கத்தினர் தலைவர் சின்னசாமி தலைமையில் வர்ணத்தீர்த்தம் தனியார் கூட்ட அரங்கத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக அரூர் கச்சேரி மேட்டிலிருந்து இருந்தது 4ரோடு, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மசூதி தெரு, பஜார் வீதி வழியாக வணிகர் சங்கத்தினர் வெள்ளை நிற சட்டை அணிந்து ஊர்வலம் நடைபெற்றது.
வர்ணத்தீர்த்தம் தனியார் கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வரும் (5.5. 2022) அன்று திருச்சியில் நடைபெற உள்ள வணிகர் சங்க மாநாட்டில் அனைவரும் குடும்பத்தோடு கலந்துகொள்வது அரூர் நகர வணிகர் சங்கத்தின் சார்பில் என்னென்ன கோரிக்கைகள் வைப்பது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சேலம் மண்டல மற்றும் தர்மபுரி மாவட்ட வணிகர் சங்க தலைவர் வைத்தியநாதன், செயலாளர் கிரிதர், பொருளாளர் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
அரூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன், துணை செயலாளர்கள் ஆசைத்தம்பி, பிரபாகரன், இணைத் தலைவர் தங்கராஜ் உள்ளிட்ட ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக நகர வணிகர் சங்க பொருளாளர் தீபக்குமார் நன்றி கூறினார்.
.gif)

