Type Here to Get Search Results !

தென்கரைகோட்டைகார்மேல் அன்னை ஆலய குருத்தோலை ஞாயிறு பவனி நிகழ்ச்சி நடைபெற்றது.

 

கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது, புனித வாரத்தின் தொடக்க நாளான குருத்தோலை ஞாயிறு, திருநாள் நிகழ்ச்சி நேற்று கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெறுகிறது. 


இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்னதாக ஜெருசலேம் நகரின் வீதிகளின் வழியாக அவரை ஒரு கழுதையின் மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வந்தனர், அப்போது வழி நெடுகிலும் மக்கள் ஓலிவ இலைகளை கையில் பிடித்து ஓசன்னா பாடல்களை பாடினர்.


இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை திருநாளை கடைபிடித்தனர், இதனையொட்டி  ஆலயங்களில் இருந்து குருத்தோலைகளை ஏந்திய வண்ணம் பாடல்கள் பாடி கிறிஸ்தவர்கள் பவனியாக செல்வார்கள். 


கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெறவில்லை, இந்த ஆண்டு தொற்று முற்றிலும் குறைந்து கட்டுக்குள் இருப்பதால் இந்த நிகழ்ச்சியை கிறிஸ்தவர்கள் சிறப்பாக அனுசரிக்கிறார்கள்.

இந்நிலையில்  தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தென்கரை கோட்டை பாத்திமா நகரில் உள்ள கார்மேல் அன்னை  ஆலயத்தில் பங்குத்தந்தை வினோத் லூயிஸ்  தலைமையில் பாத்திமா நகர் பகுதியில்  100க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கையில்  குருத்தோலை ஏந்தி கொண்டு ஊர்வலமாக சென்றனர் அதனை  தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies