தர்மபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சியில் மொத்தம் 18 உறுப்பினர்களை கொண்டதாகும். இதில் அதிமுக 7, திமுக 7, பாமக 2, சுயேட்ச்சை 2, உறுப்பினர்கள் உள்ளனர். பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் இந்திராணி தனபால், துணைத் தலைவர் சூர்யா தனபால் தலைமையில் செயல் அலுவலர் கலைவாணி முன்னிலையில் பேரூராட்சி பகுதியில் வரி விதிப்பு உயர்வு குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை. நியமன குழு உறுப்பினரும் பேரூராட்சி கவுன்சிலருமான முல்லைரவி, பேரூராட்சி உறுப்பினர்கள் ஜெயலட்சுமி, மகாலட்சுமி, பெருமாள், அன்புமணி உமாராணி, அருள்மொழி, ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
.gif)

