Type Here to Get Search Results !

டாக்டர் பி ஆர் அம்பேத்கர் விருது விழா - அரூர் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

லயோலா ஒருங்கிணைந்த உருவாக்கம் மற்றும் பயிற்சி மையம் அரூர் உட்கோட்ட பகுதியில் தற்போது 40 கிராமங்களில் செயல்பட்டு வருகின்றது அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை சிறப்பிக்கும் பொருட்டு அறிவாலும் படைப்பாற்றலாலும் புதிய சமூகம் படைப்போம் என்ற உயரிய நோக்கத்தோடு பல அறிவுச் சார்ந்த போட்டிகளையும் கலை நிகழ்சிகளையும் கடந்த இரண்டு வாரங்களாக நடத்தப்பட்டது.அதன் உச்சமாக நேற்று அம்பேத்கர் விருது விழாவாக அரூர் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் 450 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகள் பெற்றனர் அம்பேத்கர் விருது வழங்கும் விழாவிற்கு புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் ஆல்பர்ட் ஜோசப் தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக ஆசிரியர் ஏகோ  உரைவாள் அம்பேத்கர், மருத்துவர் சதீஸ் ஆகியோர் கலந்துக்கொண்டு மாணவர்கள் உயர்ந்த கவனத்தோடு பாபாசாகேப் அம்பேத்கர் போன்று வரலாறு படைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். 

இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசூர்யா ரஞ்சித் மற்றும் ஆலோசகர்கள் ஜான்சி ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies