தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அதிமுக நகர கழக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா பாலக்கோடு நகர செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பொது மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தர்பூசணி, இளநீர், நீர்மோர், வெள்ளரி உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் தொமு. நாகராசன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், வழக்கறிஞர் செந்தில், அறங்காவல் குழு தலைவர் கே.வி. ரங்கநாதன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் , நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
.gif)

