Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளி அருகே அமாணிமல்லாபுரத்தில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது.

தர்மபுரி மாவட்டத்தில்  கஞ்சா விற்பனை அதிகரித்து வந்த நிலையில்  இதை கட்டுப்படுத்தும் வகையில்  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில்  காவல்துறையினர் தீவீர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். 

மாரண்டஅள்ளி அடுத்த அமானி மல்லாபுரம் எம்.ஜி.ஆர் நகரில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற காவல்துறையினர் அமானி மல்லாபுரம் எம்.ஜி.ஆர் நகரை   சேர்ந்த சபரி (வயது. 23) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies