Type Here to Get Search Results !

நூல் வெளியீட்டு விழா.

மகிழினி பதிப்பகம் மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தமிழ்த்துறை) இணைந்து நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ம.இராஜகணபதி வரவேற்றார்.

தகடூர் புத்தகப் பேரவையின் செயலாளர்,  மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா.செந்தில் நிகழ்விற்கு தலைமை வகித்தார். மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் நா.மகேந்திரன் முன்னிலை வகித்தார்.  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மா.பழனி, ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் நா.நாகராஜ் வாழ்த்துரை வழங்கினார்கள். காணொளி வாயிலாக பால புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர்மு.முருகேஷ் சிறப்புரை ஆற்றினார். 

தகடூர் ப.அறிவொளி  எழுத்தாளர் கெளரி லிங்கம் எழுதிய உயிர் எங்கே செல்கிறது நூலிற்கும், இளந்தென்றல் சி.சரவணன், எழுத்தாளர் கஷ்மிர்ஜோசப் மை எழுதிய கண்கள் என்ற நூலிற்கும், கவிஞர் ரவிச்சந்திரன்,  எழுதாளர் கவிமுகில் சுரேஷ்  எழுதிய பாரதியின் கண்ணம்மா என்ற நூலிற்கு மதிப்புரை வழங்கினார்கள். 

நிகழ்வில் மகிழினி பதிப்பகத்தார் சு.பி.முருகன் நன்றி கூறினார்.  நிகழ்வை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் மு.கோகிலா தொகுத்து வழங்கினார். நிகழ்வில் பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் எழுத்தாளர்கள் பங்கேற்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies