தகடூர் புத்தக பேரவையின் சார்பாக வருகின்ற ஜூலை 24 முதல் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் புத்தக கண்காட்சி நடைபெறுவது சார்பாக பென்னாகரத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் தகடூர் புத்தக பேரவைத் தலைவர் இரா. சிசுபாலன், தகடூர் புத்தக பேரவையின் செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா. செந்தில் கலந்துகொண்டு புத்தக திருவிழாவிற்கு பென்னாகரம் பகுதியில் இருக்கும் ஆர்வலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பள்ளி, கல்லூரி மாணவர்களை புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ள செய்வதற்கான ஆலோசனை நிதி வசூல் செய்வது சார்பான கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் சிறப்பான கருத்துக்களை முன்மொழிந்து புத்தகத்திருவிழா வெற்றி பெறச் செய்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்பதனை முன்மொழிந்தார்கள், இந்நிகழ்வில் புத்தகப்பேரவை வட்டார ஒருங்கிணைப்பாளர் கூத்தப்பாடி மா.பழனி மற்றும் எழுத்தாளர்கள், புத்தக வாசிப்பாளர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
.gif)


.jpeg)