இந்த விழா கடந்த 11ம் தேதி திங்கட்கிழமை கணபதி பூஜையுடன்தொடங்கியது. 12. ம் தேதி பெண்கள் திரளாக தீர்த்த குடம் எடுத்தனர். நேற்று புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கலச ஆராதனை, பஞ்ச சூக்தஹோமம், துர்கா சாஸ்திர நாமம், மகா சாந்திஹோமம், பூர்ணாஹநிதி நடந்தது.
இதனையடுத்து ஸ்ரீ விநாயகர் , இடும்பன் சுவாமி, ஸ்ரீ உற்சவர் வள்ளி ஸ்ரீசுப்ரமணியர் ஸ்ரீ தெய்வானை மற்றும் நவ கிரகங்களுக்கு யாகசாலையிலிருந்து கலச தீர்த்தத்தை எடுத்து சென்று கோயில் உச்சியில் உள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாரதனை காட்டினார். பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
இதனையடுத்து ஸ்ரீ பாலசுப்ரமணியர் சிலைக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. ஸ்ரீ பாலசுப்ரமணியர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி காலை முதல் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.
.gif)

