நகர செயலாளர் பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி வரவேற்புரை ஆற்றினார். மாநில வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் தர்மச்செல்வன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் காளியப்பன், துரைசாமி ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் ஏரியூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர்கள் மண்ணை இளங்கோ, வகிதா நூர்ஜஹான் பேகம் கலந்துகொண்டு தமிழக அரசின் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள பல்வேறு நலத் திட்டங்கள் குறித்தும் அதிமுக ஆட்சியில் நிதிநிலையில் ஏற்பட்ட பற்றக்குறையில் இருந்து மீண்டு வருவது குறித்து விளக்கிப் பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர்கள் முரளி, மனோகரன், பிருந்தா நடராஜன் ,வெங்கடேசன்ஒன்றிய செயலாளர்கள் குட்டி,அன்பழகன், கோபால், குமரவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் பாப்பாரப்பட்டி பேரூர் கழக செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.
.gif)

