Type Here to Get Search Results !

பாலக்கோடு தேர்வுநிலை பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தேர்வுநிலை பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் முரளி  தலைமையில்  கூட்டம் நடைபெற்றது, துணைத் தலைவர் தஹாசினா இதாயத்துல்லா முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி அறிக்கை வாசித்தார், இந்த கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழக  அரசு நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி போன்ற பகுதிகளில் சொத்துவரியை 25 சதவீதத்திலிருந்து 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் அடிதட்டு பாமர மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர், இந்த சொத்து உயர்வை கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  அதிமுக கவுன்சிலர்கள்  குருமணிநாதன், விமலன் ஆகிய இருவரும் கருப்பு சட்டை அணிந்து கூட்டத்திற்கு வந்தனர். மேலும் சொத்து வரி உயர்வு குறித்து தீர்மானம் நிறைவேற்ற கூடாது என  காரசாரமாக விவாதம் நடத்தினர்.

ஆனால் சொத்து வரி உயர்வு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அதிமுக கவுன்சிலர்கள் குருமணிநாதன், விமலன்  ஆகிய இருவரும் கூட்டத்தை புறக்கணித்து  வெளிநடப்பு செய்தனர், அதன் பிறகு பேரூராட்சிக்கு வெளியே அரசுக்கு எதிராக சொத்து வரியை குறைக்க சொல்லி கோஷங்கள் எழுப்பினார்கள், இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies