Type Here to Get Search Results !

வங்கியில் நகை வைத்ததில் 30- கிராம் நகை மாயம் காவலர் ரவி மனைவியுடன் வங்கியின் முன்பு தர்ணா.

தர்மபுரி மாவட்டம் அரூர் ஆசிரியர் நகரில் வசித்து வரும் ரவி இவர்  கோபிநாதம்பட்டி கூட்ரோடு காவல் நிலையத்தில் SSI காவலராக பணியில் உள்ளார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரூர் பாரத ஸ்டேட் வங்கியில் குடும்ப செலவிற்காக 148-கிராம் தங்க நகையை வைத்து 2. லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வாங்கி உள்ளார், அந்த நகையை ஒரு ஆண்டு கழித்து நகையை புதிப்பிக்க வேண்டி கடந்து 6.7.21-ம் தேதி அன்று புதுப்பித்துள்ளார். 

மேலும் வங்கியில் உள்ள நகையை (ரிலீஸ்) செய்ய நேற்று 12.04.22-ம்தேதி அன்று அசலும், வட்டியும், சேர்த்து 2. லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்யை வங்கியில் கட்டி நகையை வெளியே எடுத்த பார்த்த போது நான் வைத்த 148- கிராமுக்கு பதிலாக 118- கிராம் மட்டுமே இருந்தது. 30-கிராம் டாலர் செயின் காணவில்லை இதுகுறித்து வங்கி மேலாளரிடம் கேட்டபோது இது சம்பந்தமாக எதுவும் எனக்கு தெரியவில்லை நான் விசாரித்து ஒரு வாரம் கழித்து வாருங்கள் தகவல் சொல்கிறேன் என்று பொறுப்பில்லாமல் பதில் சொல்லுகிறார். 

இதுகுறித்து அரூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்துள்ளேன் என்று தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies