Type Here to Get Search Results !

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு வரும் 18.04.2022 முதல் நடைபெறவுள்ளது.

தருமபுரி மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு 18.04.2022 முதல் 23.04.2022 வரை 6 நாட்கள் அரசு கலைக் கல்லூரி கலையரங்கம், கலெக்ட்ரேட் அஞ்சல், தருமபுரி 636 705 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

மேற்படி காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்ளவதற்கான நேர்காணல் அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள நாளில் அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் கலந்துக் கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

நேர்காணலில் கலந்து கொள்பவர்கள் கால்நடைகளை நன்கு கையாள தெரிந்திருத்தல் வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்/ தலைமை ஆசிரியரிடம் நன்னடத்தை சான்று, வாகன ஓட்டுநர் உரிமம் இருப்பின் அதற்கான சான்று, முன்னுரிமை கோருபவர்கள் தகுதியான அலுவலரிடம் பெற்ற சான்று, ஆதார் அட்டை/ குடும்ப அட்டை அசல் (ம) நகலுடன் நேர்காணலில் கலந்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நேர்காணல் அழைப்பாணை கிடைக்கப் பெறாதவர்கள் நேர்காணல் அழைப்பாணைகளை 16.04.2022 (சனிக்கிழமை) மற்றும் 18.4.2022 முதல் 23.4.2022 வரை வேலை நேரங்களில் தருமபுரி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் உரிய ஆதாரங்களுடன் நேரில் பெற்றுக் கொள்ளலாம். நேர்காணல் அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி., இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies