சர்வதேச மகளிர் தினம், புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 மார்ச், 2022

சர்வதேச மகளிர் தினம், புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி.

சர்வதேச மகளிர் தினம், புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் இலவச தடுப்பூசி முகாம் தருமபுரி சமூக சேவை சங்கம் சார்பில் அரூர் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்றது.

தருமபுரி  மாவட்டம் அரூரில் தமிழக சமூகப்பணி மையம் தமிழக பெண்கள் கூட்டமைப்பு தர்மபுரி சமூக சேவை சங்கம் சார்பில் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு பேரணி ரவுண்டானாவில் நேற்று முன்தினம் துவங்கியது. இந்த பேரணியை மறைமாவட்ட ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ் கொடியசைத்து துவங்கிவைத்தார். இந்த பேரணியானது தூய இருதய ஆண்டவர் ஆலய வளாகம் வரை சென்று நிறைவடைந்தது.

தொடர்ந்து நிலையான, நாளைக்கான இன்றைய பாலின சமத்துவம் எனும் மையக்கருத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பளர் பெனசீர் பாத்திமா, மருத்துவ அலுவலர் கீர்த்திகா செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்தக்கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் பசி பிணிக்கு எதிரான பிரச்சாரம், தலித் பெண்களை அதிகாரப்படுத்தும் CEI - திட்டம், புற்றுநோய்  பராமரிப்பதற்கான நன்கொடை வழங்கும் திட்டம் ஆகிய மூன்று திட்டங்களை துவக்கிவைத்தனர். ஆண் ஆதிக்கம் நிறைந்த உலகில் பாலின பாகுபாடு களைந்து, சமத்துவ எதிர்காலத்தை உருவாக்க வேண்டும், இன்றைய சூழலில் பெண்களின் சாதனைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

விழாவின்போது கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. விழாவின் தொடக்கத்தில் உக்ரைன் நாட்டு போரில் மரணம் அடைந்தவர்களுக்கு நினைவுகூர்ந்து  மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.