ஸ்ரீ கரக காணியம்மன் கோவில் மஹாகும்பாபிஷேக விழா - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 மார்ச், 2022

ஸ்ரீ கரக காணியம்மன் கோவில் மஹாகும்பாபிஷேக விழா

எட்டிப்பட்டி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த  ஸ்ரீ கரக காணியம்மன் கோவிலில்  மஹாகும்பாபிஷேக விழா நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த மோப்பிரிப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட எட்டிபட்டி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த  ஸ்ரீ கரக காணியம்மன் கோவிலில் கிராமத்து கவுண்டர் மாரப்பன் தர்மகர்த்தா ஜெயபால் ,மற்றும் குடியார்கள் தலைமையில் மஹா கும்பாபிஷேக விழா கடந்த 7ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக கோவிலில் அம்மனுக்கு சக்தி அழைத்தல், முளைப்பாறி எடுத்தல், பல்வேறு அபிஷேக பூஜை மற்றும் பல்வேறு யாகங்கள் நடைபெற்றன.அதனை தொடர்ந்து இன்று நான்கு கால யாகபூஜைகள், ஹோமங்கள் உள்ளிட்டவைகள் நடைபெற்றன

அதனை தொடர்ந்து ஸ்ரீ கரக காணியம்மன் கோவிலில்  மஹாகும்பாபிஷேகம் மற்றும் மஹா அபிஷேகம், கோ.பூஜை, தச தரிசனம் ,விஷ்வரூப தரிசனம், மஹா தீபாராதனை உள்ளிட்டவைகள் நடைபெற்றன அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.