இந்த விழிப்புணர்வு கலைக்குழு பிரச்சார நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் தமிழ்வேல், லட்சுமணன், செயலாளர் முனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயற்கை கிராமிய கலைக்குழுவினர் இல்லம் தேடி கல்வி சார்பான விழிப்புணர்வு பாடல்கள் நாடகங்கள், கரகாட்டம், பரிசோதனைகள் உள்ளிட்டவைகளை செய்து காட்டினார்.
இல்லம் தேடி கல்வியின் மூலம் கொரோனா காலகட்டத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பீட்டை சரி செய்யும் நோக்கத்தோடு மாலை நேரத்தில் 5 மணி முதல் 7 மணிக்குள் பள்ளி மாணவர்கள் குடியிருப்பு பகுதிகளில் தன்னார்வலர்களை கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சரவணன் ஆசிரியர் பயிற்றுநர் கார்த்திகேயன் ,பள்ளிஆசிரியர்கள மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமையாசிரியர் சுப்பிரமணியன் செய்திருந்தார்.