கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, தமிழ்நாட்டில் கடந்தாண்டு மார்ச் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. கொரோனா தொற்று பரவல் குறைந்ததால் மீண்டும் இயங்கத் தொடங்கிய பள்ளிகள், இரண்டாவது கொரோனா அலை பரவல் காரணமாக பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் மூடப்பட்டது. கொரோனா படிப்படியாக குறைந்ததைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் 9 முதல் 12ம் வகையில் பள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நவம்பர் 1 தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் நீண்ட மாத கால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் பள்ளிக்கு வருகை தந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் இனிப்புகள், மலர்கள், பலூன்கள் உள்ளிட்டவை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களுக்கு பேண்ட் வாத்தியம் முழங்க பள்ளி மாணவர்களுக்கு சல்யூட் செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் வகுப்பறைகளில் விதவிதமாக கைவண்ணத்தில் ஓவியங்கள் வரையப்பட்டு பலூன்கள், மலர்கள் உள்ளிட்டவை வழங்கி வரவேற்றனர்.
மாணவர்களின் உடல் வெப்ப நிலை சோதித்து, கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னர் மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சூளகிரி தனியார் பள்ளி நிர்வாக ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் வகுப்பறைக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு முதல் நாளாக கதைகள் வாயிலாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சூளகிரி வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் கூத்தரசன், ஆலோசகர் கமலேசன், முதல்வர் மணிமாறன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து மாணவர்களை வரவேற்றனர்.