காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது தீபாவளி தொடர் விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று தமிழகம் கர்நாடகா ஆந்திரா கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வரத்தொடங்கினர் அவ்வாறு வந்த சுற்றுலா பயணிகளை மடம் சோதனைச் சாவடியில் சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி பாதுகாப்பில் உள்ள காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் ஒகேனக்கல் சென்ற அரசுப் பேருந்துகளில் வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகள் ஏறியதால் மடம் பகுதி சோதனைச்சாவடியில் அரசு பேருந்துகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தடுத்து நிறுத்தியதால் பேருந்தில் இருந்த பயணி களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது அதன் பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பேருந்துகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது அதன்பின்பு காரில் ஒகேனக்கல் வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.