பென்னாகரத்தை அடுத்துள்ள தொன்னகுட்டஅள்ளி கிராமத்தில் 100க்கும் மேல் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
தொன்னகுட்டஅள்ளி கிராமத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காகவும் மரங்களை வளர்த்தெடுக்கும் நோக்கத்திலும் பல்வேறு கிராமங்களில் மரக்கன்றுகளை வழங்கி சமூகப் பணிகளை செய்துவரும் சமூக ஆர்வலர் முத்துக்குமார் தலைமையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஊர் பொதுமக்கள் மாணவர்கள் இளைஞர்கள் பலரும் கலந்துகொண்டு கிராமத்தில் மரக்கன்றுகளை வளர்க்க முன்வந்துள்ளனர்.
நிகழ்ச்சியில் மகிழம், கருங்கொன்றம், அசோகன், ஆலமரம், அரசமரம், புன்னை மரம், பலாமரம் நாவல் மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது, இந்த மரக்கன்றுகள் சாலை ஓரங்களில் பொதுமக்கள் நட்டனர். இந்த நிகழ்ச்சியில் இயற்கை மருத்துவர்கள் முனுசாமி, அன்னலட்சுமி, தலைமையாசிரியர் மா. பழனி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.