பாரத ரத்னா,டாக்டர் APJ.அப்துல் கலாம் அவர்களின் 90வது பிறந்தநாளான இளைஞர் எழுச்சி நாளில், பிக்கிலி ஊராட்சி, குறவன் தின்னை APJ.அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் தருமபுரி சோகத்தூரில் உள்ள Mercy Home மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் காப்பகத்திற்கு காலை உணவாக பிரியாணி, எழுதுபொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நற்பணி மன்ற தலைவர் சங்கர் வரவேற்று பேசினார். ஊர் கவுண்டர் சின்னசாமி, மந்திரி கவுண்டர் அங்கப்பன் மற்றும் வார்டு உறுப்பினர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக இந்திய அரசு - நேரு யுவ கேந்திரா தருமபுரி மாவட்டத்தின் கணக்கு மற்றும் திட்ட மேற்பார்வையாளர் G.வேல்முருகன் மற்றும் சமூக ஆர்வலர் தகடூர் ந.பிறைசூடன் ஆகியோர் பங்கேற்றனர்.
மன்றத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். நிறைவாக நற்பணி மன்ற செயலர் சக்திவேல் நன்றி கூறினார்.