தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே கே.அக்ரஹாரம் பகுதியில் அப்துல் கலாம் அவர்களின் 90வது பிறந்தநாள் விழா.
பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் சார்பில் ஏவுகணைநாயகன் மேதகு அப்துல் கலாம் அவர்களின் 90வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 100 மரகன்றுகள் நடபட்டும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இணையதள கலைநிகழ்வுகளுக்கான நற்சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் கேக் வெட்டியும் மற்றும் சட்டமேதகை அம்பேத்கர் அவர்களின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அனுசரிக்கப்பட்டது.
இதில் சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் தர்மபுரி மாவட்ட தலைவர் கலாம் அஜித் தர்மபுரி மாவட்ட இளைஞரணி தலைவர் கோவிலூர் கரண் மற்றும் சாஹிப் பயிற்சி மையம் சொ.கார்த்திக் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் நா.சின்னமணி மற்றும் இலவச பயிற்சி ஆசிரியர் கீர்த்தனா மற்றும் ஆர்.அண்ணாசாமி சமூக சேவகர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.