பாரத மாதா மக்கள் சிந்தனை குழு மற்றும் கவிஞர் கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் 90வது பிறந்தநாள் தருமபுரி மகாத்மா காந்தி சாலையில் உள்ள பாரத மாதா மணி மண்டபத்தில் வெகு சிறப்பாக கொண்டாடடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கவிஞர் கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் தகடூர்.இரா.வேணுகோபால் முன்னிலை வகித்தார், பாரத மாதா மக்கள் சிந்தனைக்குழு அமைப்பின் மக்கள் தொடர்பாளர் வினோத் நரசிம்மன் மற்றும் பாலாஜி மந்திரி அவர்கள் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்தனர்.
பாரத மாதா மக்கள் சிந்தனைக்குழு அமைப்பின் தலைவர் மா.பிரதீப்குமார், செயலாளர் திரு.சௌந்தரபாண்டியன் ஆகியோர் குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினர்.
பாரத மாதா மக்கள் சிந்தனைக்குழு அமைப்பின் பொருளாளர் திரு.சந்திரமோகன் அவர்கள் நன்றி தெரிவித்தார். கம்பன் கழக துணை தேவர் திரு.பரமேஸ்வரன் கண்காணிப்பாளர்கள் திரு.சேகர்,திரு.பாலு, திரு.மாது உள்ளிட்ட ஏராளமான குழந்தைகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.