1780ஆம் ஆண்டு விஜயதசமி அன்று ஆங்கிலேயருக்கும், சிவகங்கை ராணி வேலு நாச்சியார் படைக்கும் இடையே நடைபெற்ற போரின் போது, பெண்கள் படை தளபதியான குயிலி தனது உடலில் நெய் ஊற்றி தீ வைத்து ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கில் குதித்து உயிர் நீத்தார். இதனைத் தொடர்ந்து இப்போரில் வேலு நாச்சியார் எளிதில் வெற்றி பெற்றதாக அரண்மனை கல்வெட்டு கூறுகிறது.
வீரமங்கை குயிலியின் 241 வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தர்மபுரி மாவட்டம் ஏரியூர் பேருந்து நிலையம் முன்பு தமிழ்ப்புலிகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் பழ.முனுசாமி தலைமையில் அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வீராசாமி, பென்னாகரம் சட்டமன்ற செயலாளர் மாயக்கண்ணன், மாவட்ட நிதி செயலாளர் மாது, மாவட்ட ஓவியர் அணி செல்வராசு, திமுக முன்னாள் சேர்மன் தென்னரசு, ராஜேந்திரன், பிரபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மணிகண்டன், மஞ்சுநாத், மக்கள் அதிகாரம் சார்பில் மாவட்ட செயலாளர் அருண், திராவிடர் விடுதலை கழக நிர்வாகி ரமேஷ், மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.