தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் ஜர்தலாவ் ஊராட்சியில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் ஐயா அவர்களின் 90 பிறந்தநாளை முன்னிட்டு ஜர்தலாவ் ஏரியில் 2000 பனை மரம் நடும் நிகழ்வு நமது கிராமசபை இயக்கத்தின் சார்பாக நடைபெற்றது.
இதில்நமது கிராம சபை இயக்கத்தின் தலைவர் திரு மா.விநாயகமூர்த்தி, செயலாளர், திரு ஆனந்தன் இணைச் செயலாளர் திரு சுப்பிரமணியம் துணைத் தலைவர் திரு சிவக்குமார், மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் திரு சக்தி குமரன், திரு கிருஷ்ணன், திரு மாதப்பன் மற்றும் ஜர்தலாவ் ஊராட்சித் தலைவர் திரு ஆனந்தன் அவர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திருவேல் செல்வம் மற்றும் சதாசிவம் ஆகியோர் பங்கு பெற்றனர் இதில் இயக்கத்தின் உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு 2000 பனை விதை நடும் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றதது.