கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி இஸ்லாமிய மசூதி தெருவில் குப்பம் சாலையில் 15 அடி நீளமுள்ள மலை பாம்பு பிடிப்பட்டது.
வேப்பனப்பள்ளி குப்பம் சாலையில் இஸ்லாமிய மசூதி அருகே உள்ள முட்புதரில் சுமார் 15 அடி நீளமுள்ள மலை பாம்பை அப்பகுதியில் இருந்த மக்கள் கண்டனர்.
பின்னர் அந்த பாம்பை பிடித்த நபர்கள் வனத்துறைக்கு தகவல் அளிந்தனர் தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் பாம்பை மீட்டு அருகில் இருந்த வன பகுதிக்குள் விட்டனர்.