தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாகவுள்ள ஒரு இரவு காவலர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி .ச. திவ்யதர்சினி இஆப., அவர்கள் தகவல்.
தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாகவுள்ள ஒரு இரவு காவலர் பணியிடத்தினை நிரப்பிட இனச்சுழற்சி முறையில் 30. பட்டியல் இனத்தவர் (30.பிற்படுத்தப்பட்டோர்) (பெண்கள்) (முன்னுரிமை அல்லாதது) ( (Non Priority) தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்த மற்றும் எட்டாம் வகுப்பு தேர்ச்சியின்மையாக இருத்தல் வேண்டும்.
01.07.2021 அன்று 18 வயது பூர்த்தியடைந்த மற்றும் 35 வயதின் கீழ் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண் நபர்கள் மட்டும் தங்களது கல்வித்தகுதி, சாதிச் சான்று, வயது குறித்த சான்று மற்றும் வேலைவாய்ப்பு பதிவு குறித்த அனைத்து ஆவணங்களின் நகலுடன் 30.09.2021-க்குள் அவர்களது விண்ணப்பத்தினை தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிடையாகவோ அலுவலக வேலை நாட்களில் கிடைக்கப் பெறும் வகையில் அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04342 - 297844 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.