மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கிராமிய கலைஞர்கள் நல சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
செயலாளராக தங்களால் பணி நியமனம் செய்யப்பட்ட கிராமிய கலைஞர் எங்களது நாட்டுப்புறக் கலைஞர்களின் உற்ற நண்பர், கலைமாமணி முனைவர் தி.சோமசுந்தரம் அவர்களை மீண்டும் உறுப்பினர் செயலாளராக பணி நியமனம் செய்ய வேண்டுகிறோம். முனைவர் சோமசுந்தரம் அவர்கள் கலைஞர்களிடம் நன்கு பழககூடியவர். கிராமிய கலைஞர்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்தவர், கலைஞர்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் நன்கு அறிந்தவர். தங்களது நல்லாட்சியில் கிராமிய கலைஞரான திரு. தி. சோமசுந்தரம் அவர்களை மீண்டும் உறுப்பினர் செயலாளராக பணி நியமனம் செய்திட வேண்டுமென எங்களது கிராமிய கலைஞர்கள் நலச்சங்களின் கூட்டமைப்பு சார்பில் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது..