தர்மபுரி மாவட்டம் மிட்டாரெட்டிஅள்ளி முதல் கோம்பேரி வரை சாலை அமைக்க கோரி கடந்த 20.07.2021 அன்று உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மனு அளித்துள்ளனர். அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 40 பெண்கள் உட்பட மொத்தம் 76 பேர் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் காவல்துறை ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.